கனமழை எதிரொலி: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. அதோடு ஏராளமான விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் கரையோரம் இருக்கும் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

100 ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணையின் நீரின் அளவு வினாடிக்கு 76ஆயிரத்து 645 கன அடியாக குறைந்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 73 ஆயிரத்து 793 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.