சொத்து பிரச்சினை! பட்டப்பகலில் விதவைப் பெண்ணுக்கு ஓட ஓட அரிவாளால் வெட்டு…

கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனையால் அசம்பாவிதங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விதவைப் பெண்ணை ஓட ஓட அரிவாளால் வெட்டிய உறவினகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் வசித்து வருபவர் காவேரி. இவர் கணவனை இழந்தநிலையில் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இவருக்கும் இவரது கணவரின் சகோதரர் மற்றும் சகோதரிக்களுக்கு சொத்துபிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியனுக்கும், காவிரிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதால் அவர்கள் ஆத்திரத்தில் காவேரியை அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளனர். இதில் காவிரியின் மண்டை ,தோள்பட்டை பகுதி, இரு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் இரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் வேப்பூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.