கும்பகோணத்தில் பல கோடி மதிப்புள்ள 6 சிலைகள் பறிமுதல்!

Statue

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கும்பகோணத்தில் இருக்கும் ஒரு கடையில் சிலைகள் கடத்த வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் இறங்கினர்.

அந்த சோதனையின் போது 6 மிகவும் தொன்மையான சிலைகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக சிவகாமி அம்மன்,அர்த்தநாரிஸ்வரர், வல்லப கணபதி, திருக்கடையூர் நடராஜா, விநாயகர், கிருஷ்ணா ஆகிய சிலைகள் இருப்பதை கண்டுப்பிடித்தனர்.

இதன் மதிப்பு பலநூறு கோடிரூபாய் இருக்கும் என்றும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆவணங்கள் கேட்டு போது அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதோடு கடையின் உரிமையாளர் ராமலிங்கத்தை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.