நாளை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனாம் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இந்நிலையில் நாளை 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

அதே போல் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்றும் கூறியுள்ளது.

வருகின்ற 20 முதல் 22ஆம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.