பள்ளிகளின் ஸ்ட்ரைக் வாபஸ்: தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர்!

School

கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து இன்றைய தினத்தில் அனைத்து தனியார் பள்ளிகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று கோரிக்கை மனு கொடுத்திருப்பதாகவும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கத்தின் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த மாணவியின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று சங்கத்தின் அமைப்பினர் கூறினர். இந்த சூழலில் சமூக விரோதிகள் ஆசிரியர்களின் சான்றிதழ், மாணவர்களின் சான்றிதழ் மற்றும் விடுதியில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களையும் சூரையாடியதாக கூறினார்.

அதே போல் சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகள் இனியும் நடக்க கூடாது என்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் கோரிக்கையை முன்வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினர். இந்நிலையில் நாளை தனியார் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் பள்ளிகளின் ஸ்ட்ரைக் வாபஸ் பெற்றுள்ளதாக கூறினர்.

மேலும், இன்றைய தினத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டாலும், தமிழகம் முழுவதும் 91% தனியார் பள்ளிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…