நீட் நுழைவு தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது!!

தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதனால் பல மாணவர்கள் உயிரிழப்பதும், முறைகேட்டில் சிக்குவதும் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நேற்று நடைப்பெற்ற நீட்தேர்வில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று மதியம் 02 மணிக்கு நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. இந்த நீட் தேர்விற்காக மாணவ மாணவிகள் 01:30 மணிக்குள்ளே இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதே போல் அவர்களுக்கு பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு இருந்தது.

இந்த சூழலில் தற்போது நாடு முழுவதும் நேற்றைய தினம் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிஐ தகவல் அளித்துள்ளது. அதாவது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, உள்ளிட்ட முறைகேடுகளில் இவர்கள் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்புகள் தேசிய தேர்வு முகமையால் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அதேபோல தேர்வு முடிவு தேதியும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…