கும்பகோணம்: ஆடு மேய்க்கச் சென்றவர்கள் நடு ஆற்றில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு!!

கும்பகோணம் அருகே ஆற்றைக் கடந்து ஆடு மேய்க்க சென்றவர்கள் நடு ஆற்றில் சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் சமீபத்தில் கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக திறந்துவிடப்பட்ட தண்ணீரான கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவைகாயூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு மேய்க்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வெள்ளம் வந்ததால் அவர்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜேந்திரன் என்பவர் கொள்ளிடம் ஆற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

அதே சமயம் 3 பேர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…