சென்னையில் சோகம்! ஏரியில் மூழ்கி மீனவர் பலி..

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்தப்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள பழவேற்காடு அடுத்த சாத்தாங்குப்பம் மீனவ கிராமத்தில் பாரதியார் தெருவை சேர்ந்தவர் 46 வயதான அசோகன். இவர் நேற்றைய தினத்தில் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக்கொண்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரால் மீண்டு வரமுடியாத சூழல் உருவாகியதால் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே அசோகன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் போலீசாரு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவம் குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த அசோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இந்த சம்பவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், மீன்பிடிக்க சென்றவர் சேற்றில் சிக்கி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…