கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி – புதுக்கோட்டையில் தனியார் பள்ளிகள் மூடல்!

School

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனியார் பள்ளி தாக்குதல் குறித்து தமிழகத்தில் சில இடங்களில் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 86% மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அதேபோல் 162 நர்சரி பள்ளிகள் இயங்கவில்லை என கூறப்படுகிறது. அதோடு மொத்தமாக இதுவரையில் 50% பள்ளிகள் இயக்கவில்லை என கூறப்படுகிறது.

அதே போல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், இருப்பினும் தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு என்பது மிக முக்கியம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் தனியார் பள்ளி சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 50% பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.