சென்னையில் பரபரப்பு!! ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி..

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருக்கும் ஏ.டி.எம் மையங்களில் ஏ.டி.எம். எந்திரம் உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு சூரையாட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை சுமார் 3.15 மணியளவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எச்சரிக்கை அலாரம் ஒலித்ததாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அப்போது சம்ப இடத்திற்கு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரிந்தது. இதனிடையே ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கப்பட்டுள்ள பகுதியின் கதவை உடைத்து திறக்க முயன்றபோது, அலாரம் ஒலித்ததால் பயந்துபோய் தப்பியயோடியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் போலீசார் ஏ.டி.எம். மையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…