நாமக்கலில் பரபரப்பு!! தண்டவாளத்தில் தலையை வைத்து வாலிபர் தற்கொலை..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் செல்லும் மேம்பாலம் கீழ் உள்ள ரயில்வே வழித்தடத்தில் தலையை வைத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்ததில் தலையில் ரயில் ஏறி மூளை சிதறி உயிரிழந்துள்ள வாலிபர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது அருகில் உள்ள மது கடையில் மது அருந்தி விட்டு மதுபோதையில் படுத்து கிடந்த போது ரயில் மோதியதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட வாலிபர் விபரம் இதுவரை தெரியாத நிலையில் சம்பவ இடத்தில் ராசிபுரம் போலீசார் மற்றும் ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…