கள்ளக்குறிச்சி பள்ளியில் பதற்றம்: போலீசார் மீது கல் வீசி தாக்கும் போராட்டக்காரர்கள்!!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலம் பகுதியில் ஸ்ரீமதி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் மாணவியின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த சூழலில் மாணவி கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசாருக்கு கிடைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்போது மாணவியின் உடற்கூறு ஆய்வில் பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அதோடு, மாணவி இறப்பதற்கு முன்னர் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது தற்போது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து உள்ளதால் அப்பள்ளி சீல் வைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மாணவியிம் மரணம் குறித்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் அங்கு போராட்டம் நடத்தி தடியடி நடத்தி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…