தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு எச்சரிக்கை!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்ததில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்கள் அப்பள்ளியில் இருக்கும் பொருட்களை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல் பொருட்கள் சூறையாடப்பட்டன தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் பள்ளியின் போராட்டக்காரர்களின் தாக்குதல் நடத்தியதை குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் நாளை தமிழகத்தில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்காது என மெட்ரிகுலேசன் இயக்குனரகம் கூறியுள்ளது.

அதேபோல் நாளை ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் மனு கொடுக்க இருப்பதாக ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதோடு இதுவரையில் விடுமுறை அளித்தற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.