முல்லைப் பெரியாறு அணை நிரம்பியதால் இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Dam

முல்லைப்பெரியார் அணையில் 136 அடியை நெருக்குவதால் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்திற்கு முதல் அபாய எச்சரிக்கை தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அறிவிப்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருக்குவதை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் முதல் எச்சரிக்கை கேரள அரசுக்கும், தமிழக அரசு உட்பட 23 உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர்.

முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி(152 அடிக்கு) அளவிற்கு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இன்று 17ஆம் தேதி காலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 135.65 அடியை எட்டியது.

எனவே முல்லைப் பெரியாறு அணையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் முதல் எச்சரிக்கையை தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும், இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது முதல் எச்சரிக்கையும், 138 அடியை எட்டும்போது இரண்டாம் எச்சரிக்கையும், 140 அடியை எட்டும்போது முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 141 அடியை எட்டும்போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும் போது மூன்றாம் கட்டம் மற்றும் இறுதி வெள்ள எச்சரிக்கை அறிக்கையை அறிவிக்கப்படும்.

அதனடிப்படையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருக்குவதை தொடர்ந்து முதல் எச்சரிக்கை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடி மேல் உயர்ந்து உபரி நீர் வெளியேறி செல்லும் கேரள மாநிலம் வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து போன்ற முல்லைப் பெரியாறு கரையோர பகுதி மக்களுக்கு கேரளா அரசு எச்சரிக்கை அபாய எச்சரிக்கை அறிவிக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *