மக்களே உஷார்; காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவுப்படி இன்று மாலை மேட்டூர் அருகே உள்ள காவிரி கரையோர பகுதிகளில் தண்டூரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரை அப்படியே காவிரியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி டெல்டா பாசனத்திற்காக 25 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணை நாளையோ நாளை மறு தினமோ முழு கொள்ளளவை எட்டும் சூழல் உள்ளது. எனவே அணை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரை அப்படியே காவிரியில் வெளியேற்ற உள்ளனர். இதனால் தமிழக அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் என 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுமாறு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தலின் பேரில் இன்று மாலை மேட்டூர் அணைக்கு அருகே உள்ள காவிரி கரையோரம் உள்ள தங்கமாபுரிபட்டணம், பி.என்.பட்டி ஆகிய இடங்களில் வட்டாட்சியர் முத்துராஜா முன்னிலையில் தண்டூரா அடிக்கப்பட்டது.
அப்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட உள்ளது எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனக் கூறி தண்டூரா போடப்பட்டது.

மேலும் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களை தங்க வைக்க மேட்டூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…