ரேஷனில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய்!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் விவசாயிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பயிற்கடன் தள்ளுபடி செய்தல், இலவசமாக மின் இணைப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயில் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவேண்டுமென 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை உற்பத்தி கூட்டமைப்பினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதனிடையே தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொப்பரை தேங்காய் விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் தென்னை உற்பத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என தெரிவித்துள்ளனர். அதோடு அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு பதிலாக இவ்வகை திட்டம் கொண்டுவரப்பட்டால் தமிழகத்தில் இருக்கும் விவசாயிகள் பெரிதும் பயன் பெறுவர் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.