கருமுட்டை விவகாரம் – சுதா ஸ்கேன் மையத்திற்கு சீல்!!

ஈரோட்டில் திருமணம் ஆகாத சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் மூன்று பேர் தற்போது சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் சேலம், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய கருத்தரிப்பு மையங்களுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆய்வும் நடத்தப்பட்டதில் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவமனை செயல்பட்டதாக கூறப்பட்டது.
குறிப்பாக கருமுட்டை எடுக்க வேண்டும் என்றால் இருபத்தி ஒரு வயதிலிருந்து 35 வயது வரையில் இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற நிபந்தனைகளை கடைபிடிக்காமல் சேலத்தில் இருக்கக்கூடிய பிருந்தாவன சாலையில் இருக்கும் சுதா மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது இந்த மருத்துவமனையில் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் வேறு மருத்துவமனையில் அனுமதிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சேலத்தில் இருக்க கூடிய இரண்டு மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் தொடர்புடைய மற்றொரு மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.