மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!!

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு தற்போது சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதே சமயம் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணை நீர்மட்டமானது தற்போது 116 அடியை தாண்டியுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையின் கொள்ளளவு அல்லது நள்ளிரவு அல்லது அதிகாலையில் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக கால்வாய் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேசமயம் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் இதனால் ஒகேனக்கல் அணைக்கு திறக்கப்பட்டு நேரடியாக மேட்டூர் அணைக்கு வருவதால் கால்வாய் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியை தாண்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தற்போது காவேரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.