கள்ளக்காதல்: பெண்ணை கழுத்தை அறுத்து கொலை நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

திருச்சி மாவட்டம் திருவறும்பூர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆகும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மேலகற்கண்டார் கிராமத்தில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு வருவது வழக்கம் என கூறப்படுகிறது.

அப்போது எதிர்வீட்டில் இருக்கும் புவனேஸ்வரி என்பவருக்கு வினோத் குமார் மீது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளைடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. கணவன் வேலைக்கு சென்ற சமயத்தில் புவனேஸ்வரி அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென புவனேஸ்வரி வீட்டுக்கு சென்றார் வினோத்குமார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்த வினோத்குமார் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ரயில் முன் பாய்ந்துள்ளார்.

தகவலறிந்த போலீசார் தண்டவாளத்தில் சிதறி கிடந்த வினோத்குமாரின் உடலை கைப்பற்றியது மட்டுமல்லாமல் வீட்டில் கொலைசெய்யப்பட்டு கிடந்த புவனேஸ்வரியில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.