முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: 8 நாட்களில் ரூ.13½ லட்சம் வசூல்!!

உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு திரிபு ஆனது 8 பிரிவுகளாக உருமாற்றம் அடைந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் பாதிப்பானது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கொரோனாவின் தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் அண்மையில் சுகாதாரத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என ஜூலை 4-ஆம் தேதி தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் கடந்த 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 8 நாட்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 682 நபர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 41 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், 13-ந்தேதியில் மட்டும் 342 நபர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் பெறப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் இருக்கும் பொது மக்களிடம் விதிக்கப்படும் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.