நீலகிரி மக்களே நாளை காலை சரியாகிடும்… அமைச்சர் சொன்ன நல்ல செய்தி!

நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை மின் விநியோகம் பாதிக்கப்பட கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கன மழையால் உயர்மின் அழுத்த மின்சாரம் ஒரு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நாளைக்குள் அவை சீரமைக்கபடும் என்றார்.
மேலும் தேவையான அளவு பணியாளர்கள் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கோவையில் இருத்து கூடுதல் பணியாளர்கள் அழைக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தபடும் என்றார்.
நாளை காலைக்குள் அனைத்து இடங்களிலும் மின்சாரம் வழங்கபடும் என்ற அவர்
மின் விநியோகம் பொறுத்த வரை பாதிக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.