மாணவர்கள் கைகளில் கயிறு கட்ட கூடாது – வெளியானது அதிரடி அப்டேட்!!!

பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது தகவல்கள் வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் சமூக பாதுகாப்புத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, மாணவர்கள் தலையில் எண்ணெய் தேய்த்து தலைவீவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல் டாட்டூ குத்த கூடாது என்றும் காலணிகளை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளில் எவ்விதமான கயிறுகளையும் அணிய கூடாது என கூறப்பட்டுள்ளது. காப்பு, செயின், கம்மல் போன்ற ஆபரணங்களை அணியக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் என்றாலும்கூட மாணவர்கள் சீருடையில் வர வேண்டுமென்றும், மாணவர்களின் பள்ளிகளில் வண்ண உடைகள் எடுத்து வருவது, செல்போன் எடுத்து வருவது கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த மூன்று வருடங்களாக கயிறு பிரச்சினை என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அன்மையில் திருநெல்வேலியில் கையிறு விவகாரத்தில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்த உத்தரவை வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சமூக பாதுகாப்புத்துறை அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.