மாணவி தற்கொலை விவகாரம்: 2 ஆசிரியர்கள் கைது!!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி விடுதியில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலம் பகுதியில் ஸ்ரீமதி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பின்னர் மாணவியின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதேசமயம் பணிக்கு வந்த ஆசிரியர்களை மாணவியரின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் மாணவி கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றை உறவினர்கள் மத்தியில் மாவட்ட எஸ்பி வாசித்தார்.

அதில் தான் விளையாட்டாக இருந்த நிலையில் ஆசிரியர்கள் தன்னை படிக்க சொல்லி தொந்தரவு கொடுத்ததாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த நான் தற்போது இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் தனக்கென்று கட்டிய பள்ளி கட்டணத்தை பெற்றோர்களிடம் கொடுத்து விடுங்கள் எனக் கூறி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு முன்னதாக பள்ளியில் 4 மாணவர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், மாணவியின் தற்கொலை விவகாரத்தில் கணிதம் மற்றும் வேதியல் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.