எச்சரிக்கை: இரவு நேரங்களில் யாரும் வெளியே போக வேண்டாம்!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தலூர், கூடலூர் உள்ளிட்ட கடந்த ஒரு வாரத்திற்க்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பருவமழையின் தாக்கம் என்பது அதிகமாக இருப்பதால் இரவு பகல் பாராமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் மண் சரிவு, மரங்கள் சாய்வது போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக சாலையோரங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் வாகன ஓட்டிகள் மீது மரங்கள் சாய்ந்து விழுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போது காவல்துறையினர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி, நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும், 11 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து இருப்பதன் காரணமாக பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனடியாக 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…