மளமளவென நிரம்பும் மேட்டூர் அணை! 110 அடியை தாண்டியது..

மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 110.140 அடியாக உயர்ந்துள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மற்றும் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களாக மழை பெய்து வருவதால் இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 110.140 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு தற்போது 85,129 கன அடிநீர் வந்துகொண்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் பாதுகாப்பு கருதி கடந்த 4 நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 24-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக கிடுகிடுவென மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது. தற்போது நீர்வரத்து மளமளவென அதிகரித்து இருப்பதால்

இந்நிலையில் கர்நாடக மற்றும் கேரளமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமானது அதிகரித்துள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 1.105 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது இரண்டே நாளிலில் மேட்டூர் அணையின் நிர்மட்டம் 7 அடி உயர்ந்து தற்போது 110 அடியை தாண்டியுள்ளது.

இதனால் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தற்போது காவேரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.