இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

நீலகிரி, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ,தேனி, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்நிலைல் நேற்று உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்ககூடிய ஆகாச பாலம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக கூடலூரில் இருந்து உதகைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் உதகையில் இருந்து கூடலூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

மேலும் இன்று, நாளையும் கர்நாடகா, மத்திய, தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.