தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி!!

கடந்த சில நாட்களாக சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் புதுச்சேரியில் தந்தை கண்முன்னே 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த பாவணன் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு 10 வயதில் கிஷ்வந் என்ற மகன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிஷ்வந் வழக்கம்போல் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் பவளம் சாவடி அருகே எதிர்திசையில் திடீரென வந்த பைக் ஒன்று வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பன்னீர்செல்வம் தனது இரு சக்கர வாகனத்தின் வேகத்தை குறைத்ததாக கூறப்படுகிறது. அதில் நிலை தடுமாறி வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்த நிலையில் அவ்வழியாக வந்த தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி கிஷ்வந் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதனிடையே சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தந்தை கண் முன்னே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.