உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.823 கோடி நிதி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 828 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவது, சுய உதவிக் குழுக்களின் லோன் தள்ளுபடி செய்தது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இருக்ககூடிய 12,525 கிராம பஞ்சாயத்துக்கள், 368 பஞ்சாயத்துகள் மற்றும் 36 மாவட்ட பஞ்சாயத்துக்கள் உட்பட பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சாலை கட்டமைப்பு, குடிநீர் தேவை பூர்த்தி செய்வதற்காக 828 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இவற்றின் மூலம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விதமான பணிகள் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிநீர். சாலை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு மக்களின் தேவைகள் மூர்த்திசெய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.