ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட ல்லூரி மாணவர்கள் .. பொத்தேரியில் பரபரப்பு!!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் படிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையோரம் நின்று ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்து சம்ப இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களின் கூட்டத்தை கலைத்தது மட்டுமில்லாமல் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தங்களுடைய வகுப்பு மாணவர்களை மற்ற வகுப்பு மாணவர்கள் தாக்கியதன் காரணமாகவே அதிகளவில் தாக்குதல் நடத்ததாக கூறப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் குறித்து தனியார் கல்வி நிறுவனத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமல்லாமல் நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.