105 அடியை தாண்டிய மேட்டூர் அணை!!

Dam

கர்நாடக மாநிலம் மற்றும் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் பாதுகாப்பு கருதி கடந்த 3 நாட்களாக கர்நாடகாவில் இருந்து தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக இன்று காலை நிலவரப்படிகபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் வினாடிக்கு 1.10 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 24-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக கிடுகிடுவென மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது.

இந்நிலையில் கர்நாடக மற்றும் கேரளமாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமானது அதிகரித்துள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 98,208 கன அடியாக அதிகரித்துள்ளது.தற்போது இரண்டே நாளிலில் மேட்டூர் அணையின் நிர்மட்டம் 7 அடி உயர்ந்து தற்போது 105 அடியை தாண்டியுள்ளது.

இதனால் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி தற்போது காவேரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.