காரைக்காலில் களைகட்டிய மாங்கனி திருவிழா!!

காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர்.
காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை காரணமாக எளிமையாக நடந்த மாங்கனி திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மாப்பிள்ளை அழைப்பு உடன் மாங்கனி திருவிழா தொடங்கியது. அதே போல்திருகல்யாணம் நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்தில் வீதிஉலா மாங்கனி திருவிழா கலைக்கட்டியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. நாளை அதிகாலை காரைக்காலம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சியுடன் மாங்கனி திருவிழா நிறைவு பெறுகிறது.
அதே போல் தேனி மாவட்டம் போடியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் காரைக்கால் அம்மையார் சிவனடியாருக்கு மாங்கனி கொடுத்தது நினைவு கூறும் வகையில் சிவபெருமானுக்கு மாங்கனி காலால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.