உதகை-கூடலூர் சாலையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!!!

கூடலூரில் பெய்து வரும் கனமழையால் உதகை-கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்மேற்கு பருவமழை காரணமாக உடலில் இருக்கும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை முடங்கியுள்ளது. அதே சமயம் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்ககூடிய ஆகாச பாலம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக கூடலூரில் இருந்து உதகைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் உதகையில் இருந்து கூடலூருக்கு செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 4 மணி நேரமாக நீணட வரிசையில் நின்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த பகுதிக்கு விரைந்து சென்று நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்சரிவு அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சற்று நேரத்தில் போக்குவரத்தானது மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.