உஷார்!! தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை…

தமிழக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் இன்றைய தினத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நாளை வடதமிழகம், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி, புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 15 முதல் 17-ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளையும், நாளை மறுநாளும் கர்நாடகா, மத்திய, தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.