அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தெப்ப தேரோட்டத்தின் போது தீ விபத்து!!

தமிழகத்தில் சித்திரை வைகாசி ஆனி மாதங்களில் பிறந்தாலே கோவில் திருவிழாக்கள் பிறந்து விட்டது என்றே கூறலாம். அதேசமயம் பல இடங்களில் தீ விபத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் விமர்சையாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறத். இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா நடைப்பெறாமல் தள்ளிப்போனது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3 -ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 -ஆம் நாள் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் விமர்சையாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் சுமார் 2,000 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவிழாவையொட்டி சுமார் 9.30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் விழுந்து தீ பற்றியது. இந்த தீ விபத்தில் அலங்கார பந்தல் முற்றிலும் எறிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதனிடையே அங்கு பாதுகாப்பிற்காக இருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிரது. மேலூம், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.