சிவகங்கையில் ஐய்யனார் கருப்பண சுவாமி கோயில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற புரவுயெடுப்பு விழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தஞ்சாக்கூர் கிராமத்தில் உள்ள காவெரி ஐய்யனார் கருப்பண சுவாமி கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் ஆளடி நத்தன், முகவூர், புலவர் சேரி ஆகிய கிராம மக்களுக் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழாவில் இருபத்தி ஒரு குதிரை பொம்மைகளை திருமணம் ஆகாத இளைஞர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர்.
அதே போல் புதுகோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பூமீஸ்வரர் கோயிலில் ஆனி பிரன்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 5 தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதனிடையே முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட முதல் தேரில் விநாயகரும், இரண்டாம் தேரில் முருகனும் மற்றும் மூன்றாம் தேரில் பூமீஸ்வரர் என பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும், குழந்தைகளுக்கு கல்வி அறிவு, ஆரோக்கியம் வேண்டி தேர்க்காலில் குழந்தைகளைப் படுக்க வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி புல்வநாயகி அம்மன் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டு எல்கைப்பந்தயம் நடைப்பெற்றது.