லோன் ஆப் நிறுவனங்களின் அட்டூழியம்! ரூ.70 ஆயிரம் கடன் பெற்ற கல்லூரி மாணவருக்கு கொடுத்த ஷாக்!!

புதுச்சேரி அடுத்த பாலா என்பவர் தனியார் கல்லூரியில் படித்த் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கடன் செயலி மூலம் ரூ.70 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே வட்டிமட்டுமே கட்டி வந்த இவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி அதில் இவருடைய புகைப்படம் மாப்பிங் செய்யப்பட்ட வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். குறிப்பாக பாலாஜிக்கு வந்தது போல ஏற்கனவே இதுவரையில் 19 புகார் கடன் செயலி ஆப் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனிடையே மிரட்டல் விடுக்கும் 30-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை அடையாளம் கண்டுள்ள போலீசார் அதில் பெரும்பாலும் வெளிநாட்டு செயலிகள் மட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவற்றை இந்திய ரிசவர்வங்கி மூலம் போலீசார் தடை செய்து வருவதாக கூறியுள்ளனர். மேலும், இதுபோன்ற செயலிகளில் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இரூக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் போலீசார். அதோடு 30-க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.