ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 4-வது நாளாக தடை!!!

காவிரி ஆற்றின் நீர்வரத்தானது 1 லட்சமாக இருப்பதால் ஒகேனக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் போன்ற அனைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் இரு அணைகளில் இருந்து 1.6 கன அடி நீர் காவேரி ஆற்றில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவுக்கு 1 லட்சம் கன அடி நீர் தாண்டியுள்ளது. ஒகேனக்கலில் இரண்டும் கரைகளையும் மூழ்கடித்து தண்ணீர் பாய்கிறது. இந்த சூழலில் ஆற்றை ஒட்டியுள்ள ஊட்டமலை, ஆழம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதனால் ஒவ்வொரு கிராமங்களுக்கும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு ஐந்தருவி. மணல் மேடு, மாமரத்துன் கடவு மற்றும் தண்ணீர் தேக்கமடைந்துள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ கூடாது என கடந்த கடந்த 10 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது தொடர்ந்து 4 வது நாளாக அதிகரித்துள்ளது, மேலும் பொதுமக்களின் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை முற்றிலும் தடை விதிக்கப் படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி அவர்கள் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.