ரூ. 4,000 கோடி வங்கிக்கடன் மோசடி! – 4 பேர் அதிரடி கைது!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு தங்கம் இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது சுரானா நிறுவனம். இந்நிலையில் வங்கிகளில் இருந்து சுமார் 4000 கோடி ரூபாய் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து 1301.76 கோடியும், சுரானா பவர் லிமிடெட் சார்பில் 1495 கோடியும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 1,118 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகவும் இந்த கடனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தற்போது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராய் கரானா, ஆனந்த், பிரபாகரன் ஆகிரோரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது.

இவர்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் வருகின்ற 27-ஆம் தேதி வரையில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *