இன்ஸ்டா மூலம் கஞ்சா விற்பனை: 3 கல்லூரி மாணவர்கள் கைது!!

மதுரை கல்லூரிகளுக்கு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்வதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். மாணவர்களின் கைகளில் கஞ்சனா பொட்டலங்கள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அது எப்படி அவர்களுக்கு கிடைக்கிறது எங்கே இருந்து வாங்குகிறார்கள் என்பதை கண்டுப்பிடிக்க ரகசியமாக நோட்டமிட்டு வந்தனர்.

மதுரை ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் (ஆன்லைனில்) கஞ்சா பொட்டலங்களுடன் 3 சக மாணவர்கள் பிடிப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கஞ்சா விற்பனையில் சிக்கிய 3 மாணவர்கள் போலீஸ் கிடுபிடியால் ஓரிடத்தில் நிலையாக விற்பனை செய்ய முடியாமல் வேறு இடங்களில் இருந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதற்காக மாணவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தியது தெரியவந்தது. தங்களிடம் கஞ்சா இருப்பதை சக மாணவர்களுக்கு உறுதி செய்ய சிறு பொட்டலங்கலாக இன்ஸ்டாகிராமில் போட்டு அதில் 50,100 என குறிப்பிடுவார்களாம். இதனையடுத்து கிஷோர், மணிகண்டன், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரிடமும் இருந்து சுமார் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் 3 மாணவர்களையும் சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தி கல்லூரி மாணவர்களுக்கு சக கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *