தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என கூறியுள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் கர்நாடகா, மத்திய கிழக்கு, அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை ஆந்திரா, மத்திய, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

வருகின்ற ஜூலை 15, 16 ல் வட ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.