மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியை தாண்டியது!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளில் இருந்து உபரி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக இன்று காலை நிலவரப்படி 1.10 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக ஒகேனக்கலில் இருந்து 1 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஒகேனக்கலில் இருந்து 95,138 கன அடியாக நீர் வந்துகொண்டு இருக்கிறது. அதாவது கடந்த 8-ம் தேதியில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக கிடுகிடுவென மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது.

இதனிடையே இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து 8.30 மணியளவில் மேட்டூர் அணைக்கு 50,576 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. இந்த சூழலில் 4 மணி நேரத்தில் 1 அடி உயர்ந்துள்ளது.

இதனால் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியை தாண்டியுள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி தற்போது காவேரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.