100 அடியை எட்டிய மேட்டூர் அணை! உபரி நீர் அதிகளவு திறக்க வாய்ப்பு;

கனமழை காரணமாக மேட்டூர் அணை அறுபத்தி எட்டாவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது கூறப்படுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு உள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 50 ஆயிரம் கன அடி நீர் அணியிலிருந்து திறக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு 80 ஆயிரம் கன அடிநீர் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே காவேரி டெல்டா பாசனத்திற்காக தற்போது 15 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதே நிலைமை நீட்டித்தால் இன்னும் ஒரு சில நாட்களில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் மூன்றாவது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை 60 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது ஒரு லட்சமாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.