இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து:பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து சுற்றுலா வந்த வாகனம் மற்றும் மண்டபர் அருகே வந்து கொண்டிருந்த இரு வேன்களும் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் 10 -க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சேது என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் அறிந்த அம்மாவட்ட ஆட்சியர் படுகாயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிகிறது. இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.