சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பே இல்லை: வியாபாரிகள் திட்டவட்டம்!!

சமையல் எண்ணெய் விலை இரண்டு மாதங்களில் 30 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதாக எண்ணெய் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 75 சதவீதம் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக விநியோக சங்கிலி தடைபட்டு இந்தியாவின் சமையல் எண்ணெய் விலையானது கடுமையாக உயர்ந்தது.

இந்த சூழலில் சமையல் எண்ணெய் விலையின் அதிகபட்ச விலையில் இருந்து 15 ரூபாய் குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்தற்கு முன்னதாகவே தாங்கள் லிட்டருக்கு 30 ரூபாய் குறைத்து இருப்பதாக கூறிய எண்ணெய் வியாபாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் எண்ணை இறக்குமதி வரிக்கு மத்திய அரசு காரணம் என்று கூறினர்.

இதனால் மேலும் குறைய வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளனர். அதே நேரம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…