மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு: 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு!!

சென்னை மயிலாப்பூரில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இரண்டு பேரை குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த மே மாதம் 7-ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியபோது அவரது கார் ஓட்டுநரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஓட்டுநர் கிருஷ்ணா அவரது நண்பர் ரவி ராய் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 8 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்யதனர்.
இந்த சூழலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவு விடப்பட்டுள்ளது. மேலும் இரட்டை கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கையில் மயிலாப்பூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.