எச்சரிக்கை: இன்றுமுதல் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…

கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே இன்று மற்றும் நாளை குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 6 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அதே போல் ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வருகின்ற 11 முதல் 15-ம் தேதி வரையில் இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.