2-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்துள்ளதால் தற்போது ஒகேனக்கல் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்நிலையில் ஐந்தருவி. மணல் மேடு, மாமரத்துன் கடவு மற்றும் தண்ணீர் தேக்கமடைந்துள்ள காலங்களில் சுற்றுலாப்பயணிகள் ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளிப்பது, பரிசல் சவாரி மற்றும் அருவின் அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.

ஆனால் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ நேற்று முதல் தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதோடு பொதுமக்களின் நலன் கருதி மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை முற்றிலும் தடை விதிக்கப் படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழலில் தற்போது 2-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published.