18 அடியில் நித்தியானந்தாவிற்கு சிலை: புதுவையில் பரபரப்பு!!

சர்ச்சை சாமியார் என அழைக்கப்படும் நித்தியானந்தா தனித்தீவில் கைலாச, கரன்சி, பாஸ்போர்ட் என செட்டிலான நித்தியானந்தா அவ்வப்போது சோசியல் மீடியாவில் பக்தர்களிடம் பேசி அருளாசி வழங்குவதை வழக்கமாக கொண்டவர்.
இதனிடையே கடந்த சில வாரங்களாக அவர் ஆன்லைனில் தரிசனம் கொடுக்காத நிலையில் அவர் இறந்து விட்டார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவரோ தான் சமாதியில் இருப்பதாகவும் தனக்கு ஏகப்பட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறினார்.
இந்நிலையில் புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே வசிக்கும் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசியாவில் இருக்கும் முருகன் கோவிலைப் போலவே 18 அடியில் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலை திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.