காவிரியில் 1.10 லட்சம் கன அடி நீர் திறப்பு!!

கர்நாடகா அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதாவது கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்றைய தினத்தில் சுமார் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.10 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனிடையே கே.ஆர்.எஸ் அணையின் கொள்ளவானது 124.8 அடி உயரம் கொண்ட அணையானது தற்போது 123 அடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து 55 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது 72 ஆயிரம் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல் கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவது தெரிகிறது.
இரண்டு அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அணையின் நீரின் அளவானது தற்போது 1.10 ஆக அதிகரித்து இருப்பதாகவும் நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.