அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

தமிழகத்தில் 3 மணி நேரத்தில் ஒன்பது மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதோடு தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.